பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராத ஆக்சிஜன் தயாரிப்பு எந்திரம்

ஆரணி அரசு மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராத ஆக்சிஜன் தயாரிப்பு எந்திரத்தை திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-08-23 12:58 GMT

ஆரணி

ஆரணி அரசு மருத்துவமனை 150-க்கும் மேற்பட்ட படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாகும். மருத்துவமனையில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர்,

இந்த மருத்துவமனைக்கு ஆரணி சுற்றியுள்ள போளூர், செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு தாலுகா பகுதியில் உள்ளடங்கிய 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து பயன் அடைகின்றனர்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருவண்ணாமலை இ-சேவை மையம் மூலமாக பல லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் தயாரிப்பு எந்திரம் மருத்துவமனைக்கு வழங்கினர்.

ஆனால் இன்று வரை அந்த எந்திரத்தை பொருத்துவதற்கான இடமும் தேர்வு செய்யப்படவில்லை. மேலும் அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த ஆக்சிஜன் தயாரிப்பு எந்திரம் பயன்பாட்டுக்கு வந்தால் அனைத்து பகுதிகளுக்குமே ஆக்சிஜன் குழாய் இணைப்பு மூலம் நோயாளிகளுக்கு வழங்கி பயனடையும். ஆனால் இதனை பயன்படுத்தாமல் ஓரங்கட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவ அலுவலர் மமதா கூறுகையில், ஆக்சிஜன் தயாரிப்பு எந்திரம் மட்டும் வழங்கினார்கள் அதை பொருத்த நிதி ஒதுக்கப்படவில்லை. அதற்கான நிதி எங்களிடம் இல்லை.

அதனால் சம்பந்தப்பட்டவரிடம் கேட்டுள்ளோம். அவர்கள் நிதி தரவில்லை என்றால் கொடுத்தவர்களிடம் திருப்பி அனுப்ப முடிவு செய்து, அதற்கான கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்