எருது விடும் விழா

ஆம்பூர் அருகே எருது விடும் விழா நடைபெற்றது.;

Update:2023-03-07 00:29 IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா நடந்தது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து 250-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடின. குறைந்த நொடியில் இலக்கை அடைந்த வாணியம்பாடி வெற்றி தளபதியார் காளைக்கு முதல் பரிசாக மூன்று பவுன் தங்க நாணயமும், ஜோலார்பேட்டை மின்னல் ராணி காளைக்கு இரண்டாம் பரிசாக இரண்டு பவுன் தங்க நாணயமும், பெஸ்ட் கண்ணா பெஸ்ட் காளைக்கு மூன்றாம் பரிசாக ஒரு பவுன் தங்க நாணயம் என மொத்தம் 40 பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவில் காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்களில் 3 பேர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்