டயர் ரோட்டில் புதைந்ததால் கவிழ்ந்த டிப்பர் லாரி

ஓமலூர் அருகே டயர் ரோட்டில் புதைந்ததால் டிப்பர் லாரி கவிழ்ந்து ஜல்லிக்கற்கள், தார் கலவை கொட்டியது.

Update: 2023-05-05 20:39 GMT

ஓமலூர்

ஓமலூர் அருகே பச்சனம்பட்டி முதல் மேச்சேரி வரை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்ற ரூ.144 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் நேற்று பச்சனம்பட்டி அருகே நான்கு வழிப்பாதை பணிக்காக ஜல்லி தார் கலவையுடன் டிப்பர் லாரி ஒன்று அங்கு வந்தது. அந்த லாரியின் லாரியின் சக்கரம் ரோட்டில் புதைந்து எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதையடுத்து டிப்பர் லாரியில் இருந்த ஜல்லி தார் கலவை ரோட்டில் கொட்டியது. உடனே பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு டிப்பர் லாரியை தூக்கினர். நான்கு வழி சாலைக்காக தார் ஜல்லி கலவை கொண்டு சென்ற டிப்பர் லாரி ரோட்டில் புதைந்து கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்