மேலக்காணம் புனித வனத்து அந்தோனியார் ஆலய சப்பர பவனி

மேலக்காணம் புனித வனத்து அந்தோனியார் ஆலய சப்பர பவனி நடைபெற்றது.

Update: 2022-10-30 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி புனித சவேரியார் ஆலய பங்கின் இணைப்பங்காண மேலக்காணம் புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலயத்தில் தினமும் காலை, மாலையில் ஆராதனை நடைபெற்றது.

கடந்த 24-ந் தேதி நற்செய்தி கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையில் திருவிழா ஆராதனை நடைபெற்றது. இதனை தூத்துக்குடி மறைமாவட்ட பங்கு தந்தை ரோலிங்டன் அடிகளார், தூத்துக்குடி மறைமாவட்ட நற்செய்தி இயக்க இயக்குனர் ஸ்டார்வின் அடிகளார் ஆகியோர் நிறைவேற்றினர்.

தொடர்ந்து புனித வனத்து அந்தோனியாரின் சப்பரபவனி தெருக்கள் வழியாக நடத்தப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று காலையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது.

இதில் அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலைய பங்குத்தந்தை சில்வஸ்டர் அடிகளார், ஆறுமுகநேரி பங்குத் தந்தை அலாய்சியஸ் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர். திருவிழா திருப்பலி யில் சிறுமிகள் முதல் முறையாக நற்கருணை பெரும் வைபவம் நடைபெற்றது.

திருவிழாவில் அமளி நகர் அன்னை அமளி ஆண்கள் சபையில் சார்பாக பக்தி பஜனை பாடல்கள் பாடப்பட்டண.

விழாவில் ஆறுமுகநேரி அமளிபுரம், அடைக்கலாபுரம், வீரபாண்டியன் பட்டணம், குரும்பூர், தூத்துக்குடி, மூக்குப்பிறி, ஆகிய பகுதிகளில் இருந்து கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்