புறக்காவல் நிலையம் திறப்பு

நெல்லை வண்ணார்பேட்டையில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.

Update: 2022-10-20 19:41 GMT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் பொருட்கள் வாங்க கடைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். பொதுமக்கள் கூட்டத்தில் மர்ம நபர்கள் திருட்டு சம்பவங்கள் போன்றவற்றில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் நெல்லை வண்ணார்பேட்டையில் தீபாவளி சிறப்பு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாநகர துணை போலீஸ் கமிஷனர் (கிழக்கு) சீனிவாசன் திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் மாநகர பகுதிகளில் வண்ணார்பேட்டை மற்றும் டவுன் பகுதியில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் தொலைநோக்கி மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் நெல்லை மாநகர பகுதிகளில் இயங்கிவரும் தனியார் பஸ்களின் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பஸ் நிறுவன மேலாளர்கள் அழைக்கப்பட்டு பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் வாகனங்களை இயக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி உறுதிமொழி ஏற்க செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்