நாட்டில் 4.12 லட்சம் விபத்துகளில் ஒரே ஆண்டில் 1.53 லட்சம் பேர் பலி

Update: 2022-12-28 23:24 GMT

புதுடெல்லி,

நமது நாட்டில் கடந்த ஆண்டு நடந்த விபத்துகள் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

அது பற்றிய ஒரு பார்வை:-

* இந்தியாவில் கடந்த 2021-ம் ஆண்டில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் பலியாகி உள்ளனர். 3 லட்சத்து 84 ஆயிரத்து 448 பேர் காயம் அடைந்துள்ளனர்.

* 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021-ல் சாலை விபத்துகள் 8.1 சதவீதம் குறைந்துள்ளன. காயம் அடைவது 14.8 சதவீதம் சரிவு அடைந்துள்ளது.

* ஆனால் 2019 உடன் ஒப்பிடுகையில் 2021-ம் ஆண்டு சாலை விபத்துகளால் ஏற்படுகிற உயிர்ப்பலிகள் 1.9 சதவீதம் அதிகரித்துள்ளன.

2020-ல் குறைவோ குறைவு:-

* 2020-ம் ஆண்டில் இதுவரை இல்லாத வகையில் விபத்துகள், விபத்துகளில் ஏற்படுகிற பலிகள், காயங்கள் குறைந்துள்ளன. காரணம், கொரோனா பெருந்தொற்றால் நாட்டில் பொதுமுடக்கம், ஊரடங்கு அமலில் இருந்து வந்ததுதான்.

இந்த தகவல்கள் அனைத்தும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம், 'இந்தியாவில் சாலை விபத்துகள் -2021' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்