குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்...!

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.;

Update:2022-05-23 20:37 IST


தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த சாரல் மழையினால் இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இன்று காலையில் இருந்தே சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. குளிர்ந்த காற்று வேகமாக வீசி வருகிறது.

இதனால் இன்று முழுவதும் வெயில் இல்லாமல் குளுமையான சூழல் நிலவியது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. ஆனால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் சற்று குறைவாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்