மொழியை காப்பாற்ற உயிரை கொடுத்த இனம்தான் நமது தமிழ் இனம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் .

Update: 2023-01-06 13:14 GMT

சென்னை,

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 46-வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தொடங்கியது. புத்தக கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் .இந்த புத்தக கண்காட்சி வருகிற 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெற உள்ளது .ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சியை பொது மக்கள் பார்வையிடலாம்.

புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது ,

சென்னையில் நிரந்தரமாக புத்தக பூங்கா அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது .புத்தக கண்காட்சியினால் இலக்கிய எழுச்சி அறிவு வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது.அணைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்ததமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

நாட்டில் அறிவொளி பரவ வேண்டும் என்பதற்காக வீட்டிற்கு ஒரு நூலகம் வேண்டும் என அண்ணா கூறியுள்ளார்.

மொழி ஒரு இனத்தின் உயிர். மொழியை காப்பாற்ற உயிரை கொடுத்த இனம்தான் நமது தமிழ் இனம். ஏராளமான தமிழ் காப்பு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. மொழிதான் நமது பண்பாடு, நமது அடையாளம். மொழியை காப்பதற்கான கடமை அரசியல் கட்சியினர் மட்டுமின்றி எழுத்தாளர்களுக்கும் உள்ளது என்றார்என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்