விழுப்புரத்தில்அலங்கார நகை தயாரித்தல் பயிற்சி தொடக்க விழா

விழுப்புரத்தில் அலங்கார நகை தயாரித்தல் பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.

Update: 2023-01-08 18:45 GMT


விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் இந்தியன் வங்கி இணைந்து கிராமப்புற வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் பொருட்டு ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் குறுகியகால பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விவசாயம் சார்ந்த தொழிற்பயிற்சியான ஆடு, மாடு, தேனீ, காளாண் வளர்ப்பு, ஊறுகாய், சணல் பை, மெழுகுவர்த்தி, அலங்கார நகை தயாரித்தல், அழகு நிலையங்கள், மனிதவள மேம்பாடு, தொலைபேசி பழுதுபார்த்தல் போன்ற 69 வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அலங்கார நகை தயாரித்தல் பயிற்சிக்கான தொடக்க விழா நடைபெற்றது.

இப்பயிற்சியை இந்தியன் வங்கியின் துணை பொது மேலாளர் விஜயகுமார் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன், நிதிசார் கல்வி மைய ஆலோசகர் உதயகுமார், பயிற்சி மைய இயக்குனர் அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்