மத்திய அரசு திட்டத்தில் தொழிலாளர்கள் இணைவதற்கான வழிகாட்டுதல் கூட்டம்

மத்திய அரசு திட்டத்தில் தொழிலாளர்கள் இணைவதற்கான வழிகாட்டுதல் கூட்டம் நடந்தது.

Update: 2022-07-29 19:27 GMT

தமிழ்நாடு தொழிலாளர் ஆணையர் உத்தரவின்படி, திருச்சி கூடுதல் ஆணையர் மற்றும் இணை ஆணையர் வழிகாட்டுதலின்பேரில் பெரம்பலூரில் தொழிலாளர் நல அலுவலகத்தில் மத்திய அரசின் இ-சார்ம் திட்டத்தின் கீழ் அமைப்பு சாரா தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்ப்பதற்காக, பதிவு பெற்ற தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குதல் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாஸ்கரன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், மத்திய அரசின் திட்டத்தில் ஏற்கனவே அமைப்பு சாரா மற்றும் கட்டுமான வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களை சேர்க்கவும், மேலும் சிறு, குறு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், கால்நடை வளர்க்கும் தொழில் செய்பவர்கள், கட்டுமான தொழிலாளர்கள், நெசவாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், செங்கல் சூலை மற்றும் கல்குவாரி தொழிலாளர்கள், முடி திருத்துவோர், ஆட்டோ ஓட்டுனர்கள், சாலையோர வியாபாரிகள், தேசிய ஊரக வேலைப்பணியாளர்கள், பால் ஊற்றும் விவசாயிகள் என 18 வயது முதல் 59 வயது வரையிலான அனைத்து வகையான அமைப்பு சாரா தொழிலாளர்களும் இ-சார்ம் என்ற இணைய தளத்தில் சுயமாகவோ, அருகில் உள்ள இ-சேவை மையத்திற்கு தங்களது வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை மற்றும் தங்களது செல்போனுடன் சென்று பதிவு செய்து கொள்ளலாம், என்றார். கூட்டத்தில் உதவி ஆணையர் மூர்த்தி (அமலாக்கம்) மற்றும் பதிவு பெற்ற தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்