கூடலூர்
முதுமலை கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர்கள் சார்பில் கூடலூரில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு தலைவர் ராஜூ தலைமை தாங்கினார். செயலாளர் செருமுள்ளி சந்திரன் வரவேற்றார். பேரணி கூடலூர் சக்தி விநாயகர் கோவில் அருகே தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக சென்று புதிய பஸ் நிலையத்தை அடைந்தது.
பேரணியில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் கூடலூர் உழவர் சந்தை வளாகத்தை பேரணி அடைந்தது. அங்கு முதுமலை கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூடலூர் தோட்டக்கலை துறை அலுவலர் கவுசல்யா குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து இயற்கை விவசாயம் குறித்து பலர் பேசினர். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் உதவி வேளாண் அலுவலர் லட்சுமணன், உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.