மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

Update: 2023-02-04 18:45 GMT

தர்மபுரியை சேர்ந்தவர் உதயகுமார். இவருடைய மகன் தாமரைச்செல்வன் (வயது 27). இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதிக்கு ஒரு திருமண வீட்டிற்கு வந்த போது விபத்தில் காயம் அடைந்தார். உடனே அவரை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து நேற்று முன்தினம் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இங்கு அவர் மூளைச்சாவு அடைந்தாா். இதனை அவருடைய உறவினர்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். உடனே அவர்கள் மூளைச்சாவு அடைந்த தாமரை செல்வனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரவிச்சந்திரன், கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உத்தரவின் பேரில் டாக்டர்கள் மூளைச்சாவு அடைந்த தாமரைச்செல்வனின் 2 சிறுநீரகங்களில் ஒரு சிறுநீரகம் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகத்தை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு நோயாளிக்கு பொருத்துவதற்காகவும் எடுத்து அனுப்பி வைத்தனர். இருதயம் மற்றும் கல்லீரல் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்