காப்புக்காடுகளின் எல்லைப் பகுதியிலிருந்தே குவாரிகளைத் திறப்பதற்கு தி.மு.க அரசு அரசாணை பிறப்பித்திருப்பது கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன் டுவீட்

சுற்றுச்சூழலைக் காக்கவே அவதாரம் எடுத்தவர்களைப் போல அரிதாரம் பூசி நடிக்கும் தி.மு.க.வினரின் உண்மை முகம் இதுதான். என தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-20 14:17 GMT

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

காப்புக்காடுகளின் (Reserved Forest) எல்லைப் பகுதியிலிருந்தே குவாரிகளைத் திறப்பதற்கு தி.மு.க அரசு அரசாணை பிறப்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

காப்புக்காடுகளின் எல்லையிலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திற்குள் குவாரிகள் நடத்துவதற்கு இதுவரை தடை இருந்ததால்தான் காடுகளில் வன உயிரி சூழல் ஓரளவுக்கு பாதுகாப்பாக இருந்தது.

ஆனால், தற்போது இந்தத் தடை நீக்கப்பட்டுவிட்டால் காப்புக்காடுகளும் கனிம வளத்தால் கொழிப்பவர்களின் வேட்டைக் காடுகளாகிவிடும்.

சுற்றுச்சூழலைக் காக்கவே அவதாரம் எடுத்தவர்களைப் போல அரிதாரம் பூசி நடிக்கும் தி.மு.க.வினரின் உண்மை முகம் இதுதான். என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்