பயனாளிகளுக்கு இலவச வீடு கட்ட ஆணை
பரப்பாடியில் பயனாளிகளுக்கு இலவச வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டது.
இட்டமொழி:
நாங்குநேரி யூனியன் இலங்குளம் பஞ்சாயத்து விநாயகபுரம் காலனியில் சொந்த இடம் இல்லாமல் வீடு கட்ட இயலாமல் இருந்த ஏழை மக்களுக்கு பஞ்சாயத்து தலைவர் மூலம் வீடு கட்ட இலவசமாக இடம் வழங்கப்பட்டது. ஆவாஸ் பிளஸ் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை பஞ்சாயத்து தலைவர் வி.இஸ்ரவேல் பிரபாகரன், பரப்பாடி பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.