பூங்காவை தூய்மைப்படுத்த நகராட்சி தலைவர் உத்தரவு

பூங்காவை தூய்மைப்படுத்த நகராட்சி தலைவர் உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2022-06-12 19:56 GMT

தேவகோட்டை, 

தேவகோட்டை ராம்நகரில் தென் மாவட்டத்திலேயே மிகப் பெரிய அழகப்பா பார்க் என்ற பூங்கா உள்ளது. இந்த பூங்கா பல ஆண்டுகளாக பராமரிக்காமல் காடாக மாறிவிட்டது. இதனால் அதிகாலையில் நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள் பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக கூறிய குற்றச்சாட்டை தொடர்ந்து நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் பூங்காவை சுத்தம் செய்ய உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து தேவகோட்டை நேசக்கரங்கள் அமைப்பினர் மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து நகராட்சி துணைத் தலைவர் ரமேஷ் தலைமையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதில் வார்டு உறுப்பினர் அய்யப்பன் கலந்து கொண்டார். பணி தொடர்ந்து நடைபெறும் என துணைத் தலைவர் ரமேஷ் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்