காகித ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் வாயிற் கூட்டம்
காகித ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் வாயிற் கூட்டம் நடந்தது.
புகழூர் காகித ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலையின் மெயின் கேட் எதிரே வாயிற் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் பல்வேறு சலுகைகளை எங்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது, கூட்டத்தில் பேசிய புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன், காகித ஆலை அதிகாரிகளிடம் பேசி அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றி தரப்படும், மேலும், புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கும்பாபிஷேக விழாவிற்கு ஒப்பந்த தொழிலாளர்களின் பங்களிப்பிற்கு நன்றியும் தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட தொ.மு.ச. தலைவர் அண்ணாவேலு, காகித ஆலை ஒப்பந்த தொழிலாளர் சங்க செயலாளர் மதன், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.