விழுப்புரத்தில்ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க வடக்கு மண்டல பேரவை கூட்டம்

விழுப்புரத்தில் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க வடக்கு மண்டல பேரவை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2023-01-22 18:45 GMT


விழுப்புரத்தில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் வடக்கு மண்டல பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில செயலாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். தலித் மக்கள் உரிமை இயக்க அகில இந்திய தலைவர் ராமமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சவுரிராஜன் வாழ்த்துரை வழங்கினார்.

கூட்டத்தில், புதுக்கோட்டை வேங்கைவயல் சம்பவத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து உண்மையை தமிழக மக்களுக்கு வெளிக்கொண்டு வர வேண்டும், தலித், பழங்குடி மக்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த சட்டரீதியான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும், தலித், பழங்குடியின மக்களுக்கு தாட்கோ மூலமாக உடனுக்குடன் கடனுதவி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்