காதலர் தினத்துக்கு எதிர்ப்பு:வைகை அணை பூங்காவுக்கு தாலி, மாலையுடன் வந்த இந்து இளைஞர் முன்னணியினர்
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகை அணை பூங்காவுக்கு கையில் தாலி, மாலையுடன் இந்து இளைஞர் முன்னணியினர் வந்தனர்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக நேற்று ஏராளமான காதல் ஜோடிகள் சென்றனர். அப்போது காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து இளைஞர் முன்னணி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மனோஜ் குமார் தலைமையில் நிர்வாகிகள் மாலை, தாலியுடன் வைகை அணையில் வலம் வந்து காதல் ஜோடிகளை தேடினர். இதில் காதல் ஜோடியினர் அவர்களிடம் சிக்காமல் தப்பி ஓடினர். இதற்கிடையே அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க காதல் ஜோடிகளை வரவிடாமல் வைகை அணை போலீசார் விரட்டி அடித்தனர். இதனால் காதலர் தினத்தை கொண்டாட முடியாமல் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.