விழுப்புரம் அருகே சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு கலெக்டரிடம் விவசாய சங்கத்தினர் மனு

விழுப்புரம் அருகே சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தொிவித்து கலெக்டரிடம் விவசாய சங்கத்தினர் மனு அளித்தனா்.

Update: 2022-08-31 16:31 GMT


விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாய சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் கலிவரதன், செயலாளர் முருகையன் உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே 4 வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. இதில் விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையம் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட உள்ளது. விழுப்புரம்- புதுச்சேரி நெடுஞ்சாலை பகுதியில் சுங்கச்சாவடி அமைவதால் கிராம மக்கள் அவசரத்திற்கு கூட மதகடிப்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல முடியாது. மேலும் விவசாய பொருட்களான நெல், கரும்பு உள்ளிட்டவைகளை எடுத்துச்செல்ல கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

இங்கு சுங்கச்சாவடி அமைந்தால் விவசாயிகள் மட்டுமின்றி வியாபாரிகள், மாணவர்கள் என ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே கெங்கராம்பாளையம் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கக்கூடாது. 4 வழிச்சாலையை முழுமையாக பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்க புறவழிச்சாலையில் சுங்கச்சாவடி அமைக்க வேண்டும். மக்கள் அடுத்த கிராமத்திற்கு செல்லும் ஏற்கனவே உள்ள நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைக்கக்கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர் மோகன், இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்