மதுக்கடை திறக்க எதிர்ப்பு; த.ம.மு.க. ஆர்ப்பாட்டம்
சிவகிரி அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து த.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
சிவகிரி:
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியம் சார்பில், சிவகிரி அருகே ராயகிரி பஸ் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராயகிரியில் புதிதாக மதுக்கடை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் இன்பராஜ் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், நகர செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் கனி பாண்டியன் வரவேற்று பேசினார். மாவட்ட துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன், மாநில துணை பொதுச்செயலாளர் அருண் பிரின்ஸ், ஒன்றிய செயலாளர்கள் இன்பராஜ், முருகன், தெற்கு மாவட்ட செயலாளர் கணேசன், தெற்கு மாவட்ட தலைவர் முருகேசன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.