பண்ருட்டியில் கருணாநிதி சிலை அமைக்க எதிர்ப்பு

பண்ருட்டியில் கருணாநிதி சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Update: 2022-07-01 15:56 GMT

பண்ருட்டி, 

பண்ருட்டி நகரமன்ற கூட்டம் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்திற்கு துணை தலைவர் சிவா, ஆணையாளர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகரமன்ற தலைவர் ராஜேந்திரன், பண்ருட்டி 4 முனை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை அருகில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலையை நகர தி.மு.க. சார்பில் அமைக்கவும், அதை தொடர்ந்து நகராட்சி பராமரிக்க கேட்கும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர் மோகன் எதிர்ப்பு தெரிவித்து பேசுகையில், பண்ருட்டி 4 முனை சந்திப்பில் நீண்டகாலமாக அண்ணா சிலை உள்ளது. இந்த சிலைக்கு அ.தி.மு.க.வினரும் மரியாதை செலுத்துகிறார்கள். எனவே அண்ணா சிலைக்கு அருகில் கருணாநிதி சிலையை வைக்கக்கூடாது. இதை மீறி செய்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றார்

இதற்கு பதிலளித்த தலைவர் ராஜேந்திரன், அண்ணா சிலை அருகில் மறைந்த முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சிலை வைப்பதால் இடையூறு ஏற்படாது. தி.மு.க. ஆட்சியில் எங்கள் தலைவருக்காக வைக்கிறோம். அதற்கான செலவை தி.மு.க. ஏற்றுக்கொள்ளும் என்றார். இதையடுத்து அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்