மணிப்பூரின் உண்ைம நிலை வெளிவருவதற்கு எதிர்க்கட்சிகள் தடையாக இருக்கிறது

மணிப்பூரின் உண்ைம நிலை வெளிவருவதற்கு எதிர்க்கட்சிகள் தடையாக இருக்கிறது

Update: 2023-07-31 18:45 GMT

மணிப்பூரின் உண்மை நிலை வெளிவருவதற்கு எதிர்க்கட்சிகள் தடையாக இருக்கிறது என்று ஜி.கே.வாசன் எம்.பி. கூறினார்.

பேட்டி

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., திருவாரூரில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சி்யில் கலந்து கொள்வதற்காக வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜனநாயகத்திற்கு விரோதமானது

மணிப்பூரில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி கொண்டிருக்கிறது என்பது பத்திரிக்கை செய்தி. இந்த நிலையில் எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மணிப்பூருக்கு செல்வது தேவையில்லாத ஒன்று.

அங்கு நல்ல நிலை திரும்புவதற்குள் மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே சென்றுள்ளனர். மணிப்பூரில் சகஜ நிலை திரும்பி கொண்டிருப்பது குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை மந்திரி பேச தயாராக உள்ளார். ஆனால் நாடாளுமன்றத்தில் கூச்சலிட்டு அதை நடத்த விடாமல் செய்வது ஜனநாயகத்திற்கு விரோதமான ஒன்று.

எதிர்க்கட்சிகள் தடையாக இருக்கிறது

மணிப்பூரின் உண்மை நிலை வெளிவருவதற்கும், மக்களுக்கு தெரிவதற்கும் எதிர்க்கட்சிகள் தடையாக இருக்கிறது. நாடாளுமன்றத்தை அவர்கள் முறையாக நடத்த விட்டால் மணிப்பூரில் சகஜ நிலை திரும்பி கொண்டிருக்கிறது என்பதை ந்ாடாளுமன்றத்தில் அரசு அதிகாரப்பூர்வமாக புள்ளி விவரத்தோடு தெரிவிக்கும்.

அது வெளிவரக்கூடாது, அதை மறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கங்கணம் கட்டிக்கொண்டு நாடாளுமன்றத்தை முடக்குவது என்பது தேவையற்ற ஒன்று.

எடுத்துக்காட்டு

என்.எல்.சி. விவகாரத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்த பயிர்களை தமிழக அரசு அழித்துக்கொண்டு இருக்கிறது. விவசாய பயிர்களை அழிப்பது மூலம் தமிழக அரசு விவசாயம் சார்ந்த அரசு இல்லை என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்