சேலம் பெரியார் பல்கலைக்கழகதொலைதூர கல்வி மாணவர்களுக்கு அரியர் தேர்வு எழுத வாய்ப்புஆன்லைனில் விண்ணப்பிக்க 25-ந் தேதி கடைசிநாள்

சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி மாணவர்களுக்கு அரியர் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஆன்லைனில் விண்ணப்பிக்க 25-ந் தேதி கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-28 20:04 GMT

கருப்பூர்

சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி மாணவர்களுக்கு அரியர் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஆன்லைனில் விண்ணப்பிக்க 25-ந் தேதி கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெரியார் பல்கலைக்கழகம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் இணையவழி மற்றும் தொலைதூர கல்வி இயக்ககத்தில் சேர்ந்து மாணவர்கள் படித்து வருகின்றனர்.

அப்படி இளநிலை, முதுகலை, பிற பாடப்பிரிவுகளில் படித்த மாணவர்கள் அவர்களது படிப்பு காலம் முடிந்து அதன் பின்னர் 5 வருடங்கள் மேல் ஆகியும் அரியர் வைத்துள்ள மாணவ- மாணவிகள் தங்களது அரியர் தேர்வை எழுதுவதற்கு சிறப்பு தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் படித்த பழைய பாடத்திட்டத்தில் அரியர் தேர்வை எழுதலாம்.

25-ந் தேதி கடைசிநாள்

சிறப்பு தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் வழக்கமான தேர்வு கட்டணத்துடன் அபராத தொகை மற்றும் ஒவ்வொரு பாடத்தாளுக்கும் ரூ.2 ஆயிரம் சேர்த்து செலுத்த வேண்டும். இத்தேர்வு விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மாணவர்கள் பதிவு செய்ய வருகிற 25-ந் தேதி (புதன்கிழமை) வரையும், பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை நகல் எடுத்து பெரியார் பல்கலைக்கழகத்திற்கு 30-ந் தேதி வரையும் கொடுக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் www.Periyaruniversity.ac.in என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்