சென்னை ஐ.ஐ.டி.யில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு

சென்னை ஐ.ஐ.டி.யில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.;

Update: 2022-11-05 22:06 GMT

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி. 4 ஆண்டுகள் கொண்ட 'பி.எஸ். தரவு அறிவியல்' என்ற ஆன்லைன் பட்டப்படிப்பை கடந்த 2021-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதில் அரசு பள்ளி மாணவர்களும் இடம்பெற வேண்டும் என்ற திட்டத்தை ஐ.ஐ.டி. கொண்டு வந்தது. இதனை தமிழக அரசும் ஆதரித்தது.அதன்படி இதற்கான நுழைவுத்தேர்வு நடந்தது.

இதில் கலந்து கொண்ட 20 மாவட்டங்களை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களில் 87 பேர் வெற்றி பெற்றனர். இவர்களில் 39 பேர் மாணவிகள் ஆவார்கள்.

அவர்களுக்கான மாணவர் சேர்க்கை ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் 45 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

இந்த படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, அவர்களின் குடும்ப வருமானம் அடிப்படையில், 75 சதவீத கல்வி உதவித்தொகையை சென்னை ஐ.ஐ.டி. வழங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்