சேதமடைந்த போலீஸ் குடியிருப்பு வீடுகளை அகற்ற ேகாரிக்கை
சேதமடைந்த போலீஸ் குடியிருப்பு வீடுகளை அகற்ற ேகாரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;
காரியாபட்டி,
காரியாபட்டி ஒன்றியத்தில் எண்ணற்ற கிராமங்கள் உள்ளன. இதில் காரியாபட்டி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டு 70-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் 60-க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு இன்ஸ்பெக்டர் அலுவலகமும் உள்ளது. காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் போலீசார் அருப்புக்கோட்டை, மதுரை, திருமங்கலம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வேலை செய்து வருகின்றனர் இவர்கள் தங்களது பணி முடிந்தவுடன் வெவ்வேறு ஊர்களுக்கு சென்று விட்டு மீண்டும் அவசரபணிக்கு திரும்புவதற்கு மிகவும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். காரியாபட்டியில் போலீசார் குடியிருப்பு கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த குடியிருப்பு முழுவதும் சேதமடைந்து எந்த கட்டிடங்களையும் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருவதால் இந்த கட்டிடத்தில் யாரும் தற்போது குடியிருக்க முடியாத நிலை உள்ளது. ஆதலால் காரியாபட்டியில் உள்ள பழைய போலீஸ் குடியிருப்பு கட்டிடங்களை அகற்றி புதிதாக போலீஸ் குடியிருப்பு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.