ராமேசுவரம்-பனாரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கம்

ராமேசுவரம்-பனாரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.

Update: 2023-07-27 21:14 GMT


தென்மத்திய மண்டல ரெயில்வேக்கு உள்பட்ட ஹசன்பார்டி-காஜிபேட்டை இடையே ரெயில் பாதையில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அந்த பாதையில் செல்லும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, ராமேசுவரத்தில் இருந்து நேற்று நள்ளிரவு 11.55 மணிக்கு பனாரஸ் புறப்பட்ட வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.22535) விஜயவாடா, துவ்வடா, விழியநகரம், தித்லாகார்க், சம்பல்பூர், ஜார்சுகுடா, ஹாதியா, மூரி, பர்காகானா, சாசரம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்