பழனி முருகன் கோவிலில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி தொடக்கம்

பழனியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழனி முருகன் கோவிலில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-22 16:14 GMT

தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பழனி முருகன் கோவிலில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா மற்றும் மாணவர் சேர்க்கை ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி பழனி அடிவாரத்தில் உள்ள பழைய நாதஸ்வர பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அப்போது சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இந்த அர்ச்சகர் பயிற்சி பள்ளியை தொடங்கி வைத்தார்.

பழனியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விசாகன், பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன், அறங்காவலர்கள் ராஜசேகரன், மணிமாறன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த பயிற்சி பள்ளியில் ஒரு ஆண்டுக்கு 40 பேர் பயிற்சி பெற உள்ளனர். பயிற்சி வகுப்பில் அனைத்து சாதியை சேர்ந்த மாணவர்களும் சேரலாம். ஓராண்டு பயிற்சிக்கு பின் அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பழனியில் உள்ள பயிற்சி பள்ளயில் சேலம், தேனி என பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பழனியில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி தொடங்கிய அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்