ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறப்பு
குமரி மாவட்டத்தில் இருந்து ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறப்பு
அஞ்சுகிராமம்,
குமரி மாவட்டம் கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து ராதாபுரம் கால்வாயில் பாசனத்திற்காக 16-ந் தேதி (நேற்று) முதல் அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை தினசரி வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நேற்று காலை 9 மணிக்கு அழகப்பபுரம் அருகே உள்ள திலநகர் ஊரில் இருந்து பிரிந்து செல்லும் ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடந்தது. ராதாபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் சபாநாயகருமான அப்பாவு தண்ணீரை திறந்து விட்டார். நிகழ்ச்சியில் நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மயிலாடி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வல்சன் போஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.