வெட்டாற்றில் தண்ணீர் திறப்பு

மெலட்டூர் அருகே தடுப்பணை கட்டும் பணி நிறைவு பெற்றதால் வெட்டாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-06-18 20:29 GMT

மெலட்டூர்:

மெலட்டூர் அருகே தடுப்பணை கட்டும் பணி நிறைவு பெற்றதால் வெட்டாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தடுப்பணை கட்டும் பணி

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா மெலட்டூர் அருகே உள்ள கொண்டான்விட்டான் திடல் பகுதியில் காவலூர், பெருமாக்கநல்லூர், காவலூர் தோட்டம் உள்பட பல கிராமங்கள் பயன்பெறும் வகையில்

வெட்டாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று வெட்டாற்றில் ரூ.7.50 கோடியில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த 5 மாதமாக நடைபெற்று வந்த பணியை மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பு முடிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

வெட்டாற்றில் தண்ணீர் திறப்பு

இதைதொடர்ந்து தடுப்பணை கட்டும் பணியை மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக முடிக்க பொதுப்பணித்துறையினர் இரவு, பகல் பாராமல் கட்டுமான பணி நடந்து வந்தது.

இந்த நிலையில் தடுப்பணை கட்டும் பணி முடிவடைந்து நேற்று வெட்டாற்றில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் குறுவை சாகுபடி பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்