அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகுண்ட வாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-01-02 11:06 GMT

திருவண்ணாமலை

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகுண்ட வாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு அருணஒாசலேஸ்வலரர், உண்ணாமலை அம்மனை தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலில் பாமா ருக்மணி சமேத வேணுகோபால சாமி மற்றும் கஜலட்சுமிக்கு சன்னதிகள் உள்ளன.

இதனால் இங்கு வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்படும்.

அபிஷேக ஆராதனை

அதன்படி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. பின்னர் அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை சுமார் 5. 15 மணியளவில் வைகுண்ட வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் சாமி சன்னதியில் உள்ள பாமா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமிக்கும், கஜலட்சுமி அம்மனுக்கும் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

பின்னர் வைகுண்ட வாசல் திறக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் சாமி சன்னதியில் இருந்து வைகுண்ட வாசல் வழியாக வெளியே வந்தனர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து விடிய, விடிய சாமி தரிசனம் செய்தனர்.

பெருமாள் கோவில்கள்

இதேபோல் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர பெருமாள், அண்ணா நுழைவு வாயில் அருகேயுள்ள சீனிவாச பெருமாள், சின்னக்கடை தெருவில் உள்ள பூத நாராயண பெருமாள் ஆகிய கோவில்களிலும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்