உடன்குடியில் மின்மாற்றி திறப்பு

உடன்குடியில் மின்மாற்றி திறக்கப்பட்டது.

Update: 2022-08-17 15:52 GMT

உடன்குடி:

உடன்குடி துணை மின் நிலையத்தில் ரூ.2 கோடியே 47 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் உடன்குடி துணை மின் நிலையத்தில் கூடுதல் மின்மாற்றியாக இது தரம் உயர்த்தப்பட்டு இருந்தது. உடன்குடி துணைமின் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றினார். உடன்குடி பேரூராட்சி தலைவர் ஹூமைரா அஸ்ஸாப், துணைத் தலைவர் சந்தையடியூர் மால் ராஜேஷ், செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வரவேற்றார்.

இறுதியில் உடன்குடி உதவி பொறியாளர் மகாலிங்கம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்