குடும்பத்தகராறு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

குடும்பத்தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-02 11:39 GMT

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கோவிந்தா என்பவர் தனது மனைவி பவானி (வயது 28) என்பவருடன் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார்.

இவர்கள் திருவள்ளூர் காந்திபுரத்தில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பவானி தன்னுடைய அறையில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பவானி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்