காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் திறப்பு- மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டன

காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகளுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.

Update: 2023-10-03 22:33 GMT

கோப்புப்படம்

காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகளுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.

பள்ளிக்கூடங்கள் திறப்பு

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு (முதல் பருவ) தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி முடிந்தது.

தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு மீண்டும் 2-ம் பருவத்துக்கான வகுப்புகள் நேற்று தொடங்கின. ஈரோடு மாவட்டத்திலும் அனைத்து பள்ளிக்கூடங்களும் நேற்று திறக்கப்பட்டன.

புதிய பாடப்புத்தகங்கள்

வழக்கமாக 10 நாட்கள் வரை காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு 5 நாட்கள் மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டதால், நேற்று காலையில் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல சற்று தயக்கம் காட்டினர். ஆனால் பள்ளிகளுக்கு சென்று தங்கள் ஆசிரிய-ஆசிரியைகள், சக மாணவ-மாணவிகளை பார்த்ததும் சகஜ நிலைக்கு திரும்பினர். அரசு பள்ளிக்கூடங்களில் நேற்று 2-ம் பருவத்துக்கான புதிய பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குழந்தைராஜன் தலைமையில் அதிகாரிகள் பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்