கீழ்மருவத்தூர் ஊராட்சியில் ரேஷன் கடை திறப்பு
கீழ்மருவத்தூர் ஊராட்சியில் ரேஷன் கடை திறக்கும் விழா நடந்தது.
மதுராந்தகம்,
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்மருவத்தூர் ஊராட்சியில் ரூ.7 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டிடம் மற்றும் நூலக கட்டிடத்தை புதுப்பித்து திறக்கும் விழா நடந்தது. கீழ் மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி பொதுமக்கள் முன்னிலையில் இதை திறந்து வைத்தார். அப்போது ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அபிராமி, வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர் கருணாகரன் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.