முன்மாதிரி ரேஷன் கடை திறப்பு

விழுப்புரத்தில் முன்மாதிரி ரேஷன் கடை திறப்பு பல்பொருள் அங்காடிக்கு இணையாக பொருட்கள் கிடைப்பதால் மக்கள் வரவேற்பு

Update: 2023-04-22 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட ரங்கநாதன் சாலையில் முன்மாதிரி ரேஷன் கடை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் யசோதாதேவி, மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் இளஞ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு முன்மாதிரி ரேஷன் கடையை திறந்து வைத்து பார்வையிட்டார். இவ்விழாவில் கூட்டுறவு சரக துணைப்பதிவாளர்கள் நாராயணன், நளினா, ராமதாஸ், பிரியதர்ஷினி, சொர்ணலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர். இக்கடையில் ரேஷன் பொருட்கள் மட்டுமின்றி கூட்டுறவுத்துறையின் மூலம் தயாரிக்கப்படும் மளிகை பொருட்கள், பருப்பு வகைகள், பிஸ்கெட் வகைகள், எண்ணெய் வகைகள், சோப்பு, சாம்பு, பேஸ்ட் வகைகள் என 255 வகையான பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் கடையின் உள்ளே கண்காணிப்பு கேமரா, பெயர் பலகை, குறைகளை தெரிவிக்க புகார் பெட்டி, துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள் இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில் தனியார் பல்பொருள் அங்காடிக்கு இணையாக செயல்படும் இந்த முன்மாதிரி ரேஷன் கடை, மற்ற ரேஷன் கடைகள்போல் இல்லாமல் சேவை மையமாக செயல்படும் என்பதால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்