பாசனத்துக்காக பெருஞ்சாணி அணை திறப்பு
குமரி மாவட்டத்தில் பாசனத்துக்காக பெருஞ்சாணி அணை நேற்று திறக்கப்பட்டது.
குலசேகரம்:
குமரி மாவட்டத்தில் பாசனத்துக்காக பெருஞ்சாணி அணை நேற்று திறக்கப்பட்டது.
அணை திறப்பு
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காக கடந்த 1-ந் தேதி பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது. தற்போது அந்த அணையில் இருந்து வினாடிக்கு 836 கன அடி தண்ணீர் பாசன கால்வாயில் சென்று கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் பாசன பகுதிகளில் கூடுதல் தண்ணீர் தேவைப்படும் நிலையில் பெருஞ்சாணி அணை நேற்று காலையில் திறக்கப்பட்டது. வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் பாசன கால்வாயில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் பத்மநாபபுரம் புத்தனாறு கால்வாயில் செல்கிறது.
நீர்மட்டம்
நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 43.57 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 59.35 அடியாகவும், சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 13.84, சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 13.94 அடியாகவும் இருந்தது.
மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதிக்கு பிறகு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவுகிறது. தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்யாத நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.