பெரியநாயகி அம்மன் கோவில் உண்டியல் திறப்பு

சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது.

Update: 2023-06-08 19:20 GMT

தியாகதுருகம், 

தியாகதுருகம் அருகே சித்தலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள உண்டியல்கள் அவ்வப்போது திறந்து அதில் இருந்த காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவாகரன் தலைமையில் ஆய்வாளர் சுகன்யா, செயல் அலுவலர் பாக்யராஜ் ஆகியோர் முன்னிலையில் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் மொத்தம் ரூ.15 லட்சத்து 85 ஆயிரத்து 967 ரொக்கம் மற்றும் 58 கிராம் தங்கம், 54 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அப்போது பரம்பரை அறங்காவலர்கள் கண்ணன், முத்தம்மாள், மாரிமுத்து, மணி மற்றும் கோவில் பூசாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்