பழைய பொருட்கள் சேகரிப்பு மையம் திறப்பு
மூலைக்கரைப்பட்டியில் பழைய பொருட்கள் சேகரிப்பு மையம் திறக்கப்பட்டது.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி தேர்வுநிலை பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் (கட்டுப்படுத்துதல்-மீண்டும் உருவாக்குதல்-மறுபயன்பாடு) பழைய பயன்படுத்தப்பட்ட ஆடைகள், பிளாஸ்டிக் பொருட்கள், பழைய புத்தகங்கள், பழைய ஜோடி காலணிகள் பெறுவதற்கான சேகரிப்பு மையம் திறப்பு விழா நடந்தது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர் கு.பார்வதிமோகன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். துணைத்தலைவர் நம்பிரமேஷ், 8-வது வார்டு உறுப்பினர் விஜயராணி, தூய்மைப்பணி மேற்பார்வையாளர்கள் கலையரசி, கார்த்திக் மற்றும் தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பேரூராட்சி தலைவர் கு.பார்வதி மோகன் தலைமையில் செயல் அலுவலர் சாஜன் மேத்யூ மேற்பார்வையில் மூலைக்கரைப்பட்டி 15-வது வார்டு முத்துவீரப்பபுரம், சொக்கலிங்கபுரம், துத்திகுளம், சங்கர்நகர் ஆகிய ஊர்களில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் கேட்டு கள ஆய்வு நடத்தப்பட்டது.