புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு

நாங்குநேரி அருகே ஏமன்குளத்தில் ரூ.9.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறக்கப்பட்டது.;

Update: 2022-11-30 20:33 GMT

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் இறைப்புவாரி பஞ்சாயத்து ஏமன்குளத்தில் ரூ.9.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி திறப்பு விழா, மேலும் அங்கு புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா, புதுக்குளத்தில் பெருமாள் கோவில் தெரு புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி மற்றும் வாறுகால் சீரமைக்கும் பணி, இலங்குளம் பஞ்சாயத்து ராஜீவ்காந்தி நகர், பாண்டிச்சேரி கிராமத்தில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, கூந்தன்குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் 4,500 விதை பந்துகள் வீசும் பணி தொடக்கவிழா நடைபெற்றது. நாங்குநேரி யூனியன் தலைவர் சவுமியா எட்வின் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின், பஞ்சாயத்து தலைவர்கள் மோகனா யோசுவா, இசக்கித்துரை, ஒன்றிய கவுன்சிலர்கள் அகஸ்டின் கீதராஜ், பிரேமா எபனேசர், ஜெபக்கனி செந்தில்ராஜ், கிறிஸ்டி, பரப்பாடி ஞானராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சவுமியா எட்வின் நாங்குநேரி யூனியன் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு பேரணியை தொடங்கி வைத்தார். முனைஞ்சிப்பட்டி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு நடந்த வளைகாப்பு விழா, நாங்குநேரி வட்டார அளவிலான அரசு பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் கலைத்திருவிழா நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் நாங்குநேரி யூனியன் ஆணையாளர் கிஷோர்குமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்துலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்