நீர்மோர் பந்தல் திறப்பு

நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.;

Update: 2023-06-07 19:00 GMT

வாசுதேவநல்லூர்:

பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு சிவகிரி நகர பஞ்சாயத்து திரவுபதி அம்மன் கோவில் உள்பட 4 இடங்களில் தென்காசி அ.ஆனந்தன் அறக்கட்டளை சார்பாக நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.

நீர், மோர் பந்தலை பாரதீய ஜனதா கட்சி வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில துணை தலைவர் அ.ஆனந்தன் தலைமை தாங்கி, திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் சீதாராமன் ராகவன், வேல்முருகன், அஜித், அரிச்சந்திரன், சங்கரநாராயணன், சுமன், ஆனந்தன் சகோதரர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்