கூத்தம்பாக்கம் பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

கூத்தம்பாக்கம் பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

Update: 2022-09-27 18:45 GMT

காவேரிப்பாக்கம்

கூத்தம்பாக்கம் பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் பாணாவரம், ரங்காபுரம், கூத்தம்பாக்கம், வேடந்தாங்கல், சிறுவளையம், களத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில் நுகா்பொருள் வாணிபகழகத்தின் சார்பில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் கூத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் பயனடைய உள்ளனர். இதனையொட்டி அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஊராட்சி நிா்வாகத்தினர் கூறுகையில் விவசாயிகள் அலைகழிக்கப்படாமல் கொண்டுவரும் நெல்மணிகளை நிா்வாகத்தினர் முறையாக வாங்கி அதனை பாதுகாத்து விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய தொகையை உடனடியாக வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்