கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு:சிறப்பு தரிசனத்துக்கு இணையதளத்தில் 3 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்தனர்

சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு தரிசனத்துக்கு இணையதளம் மூலம் இதுவரை 3 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-12-28 20:58 GMT

சேலம், 

சொர்க்கவாசல் திறப்பு

சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 2-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் சிறப்பு நுழைவு தரிசனத்திற்கு பக்தர்கள் http://tnhrce.gov.in என்ற இணையதளம் மூலம் சிறப்பு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.25 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசி அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே சிறப்பு நுழைவு கட்டணம் மூலம் சாமி தரிசனம் செய்து கொள்ள அனுமதி உண்டு.

ரூ.25 கட்டணம்

அதேபோல், பொது தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பழைய புத்தக கடை வீதி, ஹபீப் தெரு வழியாக கோவிலை வந்தடையலாம். சிறப்பு தரிசனத்திற்கு ஆன்லைனில் ரூ.25 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்த பக்தர்கள் குண்டுபோடும் தெரு வழியாக கோவிலுக்குள் செல்ல வேண்டும்.

மேலும், மாற்றுத்திறனாளிகள், பழைய புத்தக கடை அருகே அமைக்கப்படும் முகாமை தொடர்பு கொண்டு தரிசனம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 2-ந் தேதி திறக்கப்படும் சொர்க்க வாசல் 12-ந் தேதி வரை திறந்து இருக்கும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

3 ஆயிரம் பேர் பதிவு

இதனிடையே, கோவிலில் வருகிற 1-ந்தேதி (புத்தாண்டு) வரை தினமும் மாலை பகல் பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 6-ம் நாளான நேற்று பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு சிறப்பு கட்டண தரிசனத்திற்கு இதுவரை இணையதளம் மூலம் சுமார் 3 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்