திருத்தணியில் இ-சேவை மையம் திறப்பு - அமைச்சர் தொடங்கி வைத்தார்

திருத்தணியில் இ-சேவை மையத்தை அமைச்சர் நாசர், அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆகியோர் திறந்துவைத்தனர்.;

Update: 2023-05-02 09:32 GMT

திருத்தணி எம்.எல்.ஏ. அலுவலகம் மா.பொ.சி. சாலையில் செயல்பட்டு வருகிறது. அதில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இ-சேவை மையத்தை பால்வளத்துறை அமைச்சர் நாசர், அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆகியோர் திறந்துவைத்தனர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பயனாளிகளுக்கு உரிய சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் திருத்தணி எம்.எல்.ஏ. சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட கூடுதல் கலெக்டர் ரிஷப், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து நகர இளைஞரணி அமைப்பாளர் கிரண் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு அமைச்சர் நாசர், ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் அன்னதானம் வழங்கினர். அப்போது இளம்பெண் ஒருவர் செல்போன் பேசியபடி அன்னதானம் பெற முயன்றார். இதனை பார்த்த அமைச்சர் நாசர் பெண்ணின் காதில் இருந்த செல்போனை பறித்து "முதலில் சாப்பிடு" என அதட்டினார். பின்னர் செல்போனை பெண்ணின் கையில் கொடுத்தார். இதனால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்