மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறப்பு

கீழ்வேளூரில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறப்பு விழா நடந்தது.

Update: 2022-11-14 18:45 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில்நாகை தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திகா கலந்து கொண்டு நீதிமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார். நீதிமன்ற பணிகளை மாவட்ட நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் நீதிபதிகள் மணிவண்ணன், சீனிவாசன், நாகப்பன், நாகை மாலி எம்.எல்.ஏ., கீழ்வேளூர் ஒன்றிய குழு தலைவர் வாசுகி நாகராஜன், பேரூராட்சி தலைவர் இந்திராகாந்தி, நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், தாசில்தார் ரமேஷ்குமார், நாகை வக்கீல்கள் சங்க தலைவர் வைரவநாதன், பேரூராட்சி செயல் அலுவலர் குகன் மற்றும் வக்கீல்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்