குழந்தைகள் நல மாவட்ட ஆரம்ப இடையீட்டு மையம் திறப்பு

குழந்தைகள் நல மாவட்ட ஆரம்ப இடையீட்டு மையத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.;

Update: 2022-12-29 17:24 GMT

வாலாஜா அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் குழந்தைகள் நல மாவட்ட ஆரம்ப இடையீட்டு மையம் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், நகர மன்ற தலைவர் ஹரிணி தில்லை, துணைத்தலைவர் கமலராகவன், மருத்துவமனை தலைமை மருத்துவர் உஷா நந்தினி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சொக்கலிங்கம், உதவி செயற்பொறியாளர் திரிபுரசுந்தரி மற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்