குரும்பேரி ஊராட்சியில் புதிய ரேஷன் கடை திறப்பு

குரும்பேரி ஊராட்சியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2023-03-16 18:24 GMT

திருப்பத்தூர் தாலுகா பேராம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் இயங்கி வந்த ரேஷன் கடையை பிரித்து குரும்பேரியில் புதிய முழுநேர ரேஷன் கடை அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்பேரில் புதிய முழு நேர ரேஷன் கடை திறப்பு விழா குரும்பேரி கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேராம்பட்டு கூட்டுறவு சங்க தலைவர் ஆர்.குலோத்துங்கன் தலைமை வகித்தார். கூட்டுறவு சார் பதிவாளர் தர்மேந்திரன், சர்க்கரை ஆலை இயக்குனர் ராஜா முன்னிலை வகித்தனர். செயலாளர் சிட்டிபாபு வரவேற்றார்.

புதிய ரேஷன் கடையை நல்லதம்பி எம்.எல்.ஏ. திறந்து வைத்து பொதுமக்களுக்கு சர்க்கரை, அரிசி வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர்கள் திருமதி, விஜியா அருணாச்சலம், இயக்குனர் தெய்வகுமார் உள்பட பலர் பேசினார்கள். வட்ட வழங்கல் அலுவலர் திருமலை, மாவட்ட கவுன்சிலர் கே.ஏ. குணசேகரன், ஒன்றிய கவுன்சிலர் ஹேமலதா வினோத்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் சாந்தா தேவன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்