2 பகுதிநேர ரேஷன் கடைகள் திறப்பு

திருப்பத்தூர் அருகே 2 இடங்களில் பகுதிநேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டது.

Update: 2023-08-23 18:59 GMT

திருப்பத்தூர் அருகே உள்ள பொம்மிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட ஏழருவி மற்றும் பழத்தோட்டம் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் புதிய ரேஷன் வேண்டும் என நல்லதம்பி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் பொம்மிக்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் ஏ.கே.மோட்டூர் கடையை பிரித்து ஏழருவி பகுதியிலும், ஜோன்றம்பள்ளி கடையை பிரித்து பழத்தோட்டம் பகுதியிலும் புதிய பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.

விழாவுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். ஊராட்சிமன்ற தலைவர் தேன்மொழி வெங்கடேசன் வரவேற்று பேசினார். ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 2 புதிய பகுதி நேர ரேஷன் கடைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி, ரேசன் பொருட்களை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சார் பதிவாளர்கள் தர்மேந்திரன், கோபிநாதன், திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாளர் தண்டபாணி, ஒன்றியக்குழு தலைவர் விஜியா அருணாச்சலம், ஒன்றியக குழு உறுப்பினர் எம்.ஜி.பூங்காவனம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்