இளையான்குடி தீயணைப்பு நிலையம் ெதாடக்க விழா
இளையான்குடி தீயணைப்பு நிலையம் ெதாடக்க விழா நடைபெற்றது;
இளையான்குடி
இளையான்குடியில் புதிய தீயணைப்பு நிலையம், புதிய தீயணைப்பு வாகனம் வழங்கி தமிழ்நாடு முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தீயணைப்பு நிலையத்தில் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட அலுவலர் சத்தியகீர்த்தி, உதவி அலுவலர் தாமோதரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், பேரூராட்சி தலைவர் நஜுமுதீன், ஒன்றிய சேர்மன் முனியாண்டி, நிலைய அலுவலர் பிரகாஷ், குமரேசன், தாசில்தார் கோபிநாத், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், பேராசிரியர் ஆபிதீன், ஒன்றிய துணைச் செயலாளர் சிவனேசன், பேரூராட்சி துணைத் தலைவர் இப்ராஹிம், இளைஞர் அணி பைரோஸ்கான், தகவல் தொழில் நுட்ப அணி கண்ணன், அழகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.