ஊட்டி லெவன் ஸ்டார்ஸ் அணி வெற்றி

மாவட்ட கால்பந்து லீக் போட்டியில் ஊட்டி லெவன் ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்றது.

Update: 2022-10-30 18:45 GMT

கோத்தகிரி, 

நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான டிவிஷன் லீக் கால்பந்து போட்டிகள் ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானம், குன்னூர் ராணுவக் கல்லூரி மைதானத்தில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் குன்னூரில் ராணுவக்கல்லூரி மைதானத்தில் ஏ டிவிஷன் பிரிவு (ஆண்கள்) முதல் போட்டியில் ஊட்டி ஹார்வெஸ்டர்ஸ் அணியும், காஸ்மோஸ் அணியும் மோதியது. இதில் சிறப்பாக விளையாடிய ஊட்டி ஹார்வெஸ்டர்ஸ் அணி 6-3 என்ற அணி வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் ஊட்டி லெவன் ஸ்டார்ஸ் அணியும், ஓரியண்டல் அணியும் விளையாடியது. இதில் ஆட்டம் தொடங்கியது முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய ஊட்டி லெவன் ஸ்டார்ஸ் அணி 8-0 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றி பெற்றது. ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தில் பெண்கள் பிரிவில் ரோபின் அணியும், லெஜெண்ட் அணியும் மோதியது. இதில் ரோபின் அணி 7-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.


Tags:    

மேலும் செய்திகள்