ஊட்டி ரோஜா கண்காட்சி இன்றுடன் நிறைவு - ஆர்வத்துடன் குவியும் சுற்றுலா பயணிகள்

மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுவதால் ஊட்டி ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.

Update: 2024-05-19 10:12 GMT

நீலகிரி,

கோடை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஊட்டியில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி கடந்த 10-ந்தேதி தொடங்கியது.

ஊட்டி ரோஜா பூங்காவில் தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெற்ற இந்த மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ரோஜா மலர்களைக் கொண்டு யானை, புறா, புலி உள்ளிட்ட விலங்குகளின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இதனை குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

இந்நிலையில் இன்றுடன் ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி நிறைவு பெறுகிறது. இன்று காலை நிலவரப்படி, கடந்த 10 நாட்களில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ரோஜா கண்காட்சியை கண்டு ரசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலையுடன்  மலர் கண்காட்சி நிறைவு பெறுவதால் சுற்றுலா பயணிகள் கண்காட்சியை காண ரோஜா பூங்காவில் இன்று அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.  

Full View
Tags:    

மேலும் செய்திகள்